50000 முதலீட்டில் டெக்னாலஜி லெவல் பிசினஸ் தொடங்கலாம்.. அது என்ன தொழில்
குறைந்த முதலீட்டில் லாபகரமான தொழில்கள் தொடங்கி சிறந்த வருமானத்தை பெற உதவுகின்றன. திட்டமிட்ட முயற்சி மற்றும் தரமான சேவைகளால் வளர்ச்சி உறுதியாகும்.
செல் போன் சரிசெய்தல் மற்றும் உதிரி பாகங்கள் வியாபாரம்
நவீன காலத்தில் செல் போன் சரிசெய்தல் மற்றும் உதிரி பாகங்கள் வியாபாரம் சிறந்த தேர்வாகும். குறைந்த முதலீட்டில் தேவையான கருவிகள் மற்றும் முக்கிய உதிரி பாகங்களை வாங்கி, வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவைகளை வழங்கலாம்.
லட்ச கணக்கில் வருமானம் தரும் தொழில் Click Here
மேலும், மென்பொருள் அப்டேட், டிஸ்ப்ளே மாற்றம் போன்ற அடிப்படை சேவைகளை வழங்கி வருவாயை அதிகரிக்க முடியும். இந்த வியாபாரம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் சிறப்பாக செயல்படும். சமூக ஊடகங்களில் விளம்பரமும் வாடிக்கையாளர்களை ஈர்க்க உதவும்.
செல் போன் சரிசெய்தல் மற்றும் உதிரி பாகங்கள் வியாபாரம் தொடங்குவதற்குகாண கடை இடம் தேர்வு மிக முக்கியம் ஆகும். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் கடையை தொடங்கவும். உதாரணமாக சந்தைகள், பஸ் நிலையம், கல்லூரிகள் அருகில்.
செல் போன் சரிசெய்தல்
- டிஸ்ப்ளே, பேட்டரி, சார்ஜிங் போர்ட் மற்றும் கேமரா பிரச்சினை சரிசெய்தல்.
- மென்பொருள் அப்டேட் மற்றும் பாஸ்வேர்டு ரிசெட்.
- நீரில் மற்றும் செல் போன் தவறி விழுதல் சேதம் அடைந்த சாதனங்களை சரிசெய்தல்.
உதிரி பாகங்கள் வியாபாரம்
- மொபைல் கவர், டேம்பர்ட் கிளாஸ், புளூடூத் ஹெட்செட், பேட்டரி, சார்ஜர், டேட்டா கேபிள் போன்றவை முக்கிய பாகங்கள் விற்பனை செய்யலாம்.
- சமூக ஊடகங்கள் (Facebook, Instagram) மூலம் விளம்பரம் செய்தும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கியும் வியாபாரம் செய்யலாம்.
முதலீடு
- சிறிய அளவிலான கடைக்கு ₹50,000 முதல் முதலீடு போதுமானது
- ஸ்க்ரூ டிரைவர்கள், சால்டர் கருவிகள், ஹீட் கன், பேட்டரி, டிஸ்ப்ளே சார்ஜிங் போர்ட், மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் உதிரி பாகங்கள் அவசியமான கருவிகள் ஆகும்.
லாபம்
செல் போன் சரிசெய்தல் மற்றும் உதிரி பாகங்கள் வியாபாரம் லாபகரமானது, ஏனெனில் மொபைல் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- ஒரே மொபைலில் டிஸ்ப்ளே மாற்ற ₹1,000 - ₹3,000 வரை லாபம் பெறலாம்.
- சார்ஜிங் போர்ட் சரிசெய்தல் ₹300 - ₹1,000 வரை வசூல் செய்யலாம்.
- மென்பொருள் அப்டேட்:₹500 - ₹1,000 வரை லாபம்.
- உதிரி பாகங்கள் கவர், டேம்பர் கிளாஸ் போன்ற சிறிய பொருட்களில் 30%-50% வரை லாபம்.
- செல் போன் சரிசெய்தல் பயற்சி வகுப்புகள் தொடங்கியும் வருமானம் எட்டலாம்.

.jpg)

.jpg)
.jpg)

.jpg)
